தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர். இவர் சினிமாவை தவிர பைக் ரேஸ், கார் ரேஸ், விமானம் ஓட்டுவது போன்றவற்றிலும் ஆர்வம் கொண்டவர் .அவ்வப்போது புதிய மாடல் பைக் மற்றும் கார் எது வந்தாலும் அதனை வாங்கி அதன் மெக்கானிசம் எப்படி உள்ளது என்பதைப் பார்ப்பதற்காக பிரித்துப் போட்டு பார்த்துக் கொண்டிருப்பாராம்.

சினிமாவை தாண்டி தற்போது துப்பாக்கி, சூடு ட்ரோன் விமானத்திலும் கவனத்தை  செலுத்தி வருகிறார். சமீபத்தில் அண்ணா யுனிவர்சிட்டி மாணவர்களுக்கு டிரோன் விமானத்தின் பயன்கள் பற்றி அவர்களுக்கும் பயிற்சி கொடுத்து வருகிறார்.அவரது குழு அஜித்துடன் சேர்ந்து கண்டுபிடித்த ட்ரோன் விமானத்தில் ஊரடங்கு நேரத்தில் கிட்டத்தட்ட 3,500 பேருக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து என்டிடிவியில் அந்த குழுவின் சிஇஓ வீடியோ ஒன்றை வெளியிட்டு தல அஜித்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.


Post a Comment

புதியது பழையவை