நடிகை காயத்ரி ரகுராம் கடந்த 2002ம் ஆண்டு சார்லி சாப்ளின் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் இவருக்கு பெரிதாக படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. பின்னர் நடன இயக்குனர் என்று தனது ரூபத்தை மாற்றிக் கொண்டார்.

நடனத்திலும் சில படங்கள் பணியாற்றினார். பின்னர் அதிலும் பெரிதாக வாய்ப்பு கிடைக்காததால் சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் தொடரின் முதல் சீசனில் கலந்துகொண்டு மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பினார் தமிழ் ஆடியன்ஸுக்கு மிகவும் ஒவ்வாத ஒரு கேரக்டராகவே பிக்பாஸ் வீட்டில் இருந்தார் காயத்ரி ரகுராம். இதனை தாண்டி அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது காயத்ரி ரகுராம் வாடிக்கையாகும். தற்போது பாரதிய ஜனதா கட்சியின் ஒரு பொறுப்பில் இருக்கும் இவர் தனது  கட்சியை விட்டு விட்டு எதிர்க்கட்சிகளை கேள்வி கேட்கும் வாடிக்கையை கொண்ருக்கிறார்.

இந்நிலையில் போதை பழக்க தடுப்பு தினம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். யாரும் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி விட வேண்டாம் என்று அந்த வீடியோவில் பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த ட்விட்டர்வாசிகள் காயத்ரி ரகுராம் என் மற்றொரு முகத்தை தோலுரித்துக் காட்டியுள்ளனர்.

ஏற்கனவே காயத்ரி ரகுராம் கடந்த 2018ஆம் வருடம் குடிபோதையில் தாறுமாறாக கார் ஓட்டி அடையாறு போலீசாரிடம் வாக்குவாதம் செய்து ஒரு இரவு முழுவதும் போலீஸ் ஸ்டேஷனில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த பேப்பர் கட்டிங்கை எடுத்து அவரது ட்விட்டர் பக்கத்தில் கமென்ட் செய்துள்ளனர் ட்விட்டர் வாசிகள்.

மேலும், தொடர்ச்சியாக மது பழக்கத்திற்கு அடிமையாக உள்ள நீங்களே எங்களை போதை பழக்கத்திற்கு அடிமையாக விட வேண்டாம் என்பது போல் பேசி வருகிறீர்கள் என கமெண்ட் பாக்ஸில் தொடர்ந்து  கமென்ட் செய்து வருகின்றனர். காயத்ரி ரகுராம் ஏற்கனவே 2006 ஆம் ஆண்டு ஒருவரை திருமணம் செய்துகொண்டு நான்கு வருடங்கள் மட்டுமே வாழ்ந்து அதன் பின்னர் விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment

புதியது பழையவை