இந்த மாதம் ஜூன் 15ஆம் தேதி இந்திய சீன எல்லைப் பகுதியான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இருநாட்டு வீரர்களுக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் மரணமடைந்தனர். சீனாவின் சார்பில் எத்தனை இறப்பு என்பது தற்போது வரை அந்த நாடு அறிவிக்கவில்லை. இது தொடர்பாக இரு நாடுகளும் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது குறித்து பேசிய இந்திய பிரதமர் நரேந்த்ர மோடி இந்தியாவில் எந்த இழப்பும் ஏற்படவில்லை நாம் எந்த இடத்தையும் விட்டுக் கொடுக்கவில்லை என்று முன்னுக்கு பின்னாக முரணாக அறிக்கை விடுத்தார்.இப்படி இருக்கையில் இந்த மோதல் கைகலப்பு நடைபெறும் முன்னர் இந்திய வீரர்களை தாக்குவதற்கு தற்காப்புக்கலை வீரர்களை ராணுவ வீரர்கள் உடையணிந்து சீன ராணுவம் பெரியதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. மலையேற்ற வீரர்கள், தற்காப்புக்கலை வீரர்கள், மார்ஷியல் ஆர்ட்ஸ் தெரிந்தவர்கள் என பலரும் எல்லையில் நிறுத்தப்பட்ட இந்திய ராணுவ வீரர்களை தாக்குவதற்காக பயன்படுத்தப்பட்டார்கள் என்று சீன ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


Post a Comment

புதியது பழையவை