உலகின் நம்பர்-1 டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சிற்கு தற்போது கோரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. தற்போது உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தனது ருத்ர தாண்டவத்தை ஆடி வருகிறது இந்த கரோனா வைரஸ்.

இதனால் பல செலிபிரிட்டிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிரிக்கெட் வீரர்கள் கால்பந்து வீரர்கள் அரசியல்வாதிகள் என யாரையும் விட்டுவைக்கவில்லை. அந்த வரிசையில் தற்போது உலகின் நம்பர்-1 டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளார்.
நேற்று முன்தினம் இவருக்கு கோரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது இதனை தொடர்ந்து கரோனா வைரஸை கடத்த தானும் ஒரு காரணமாக இருந்ததற்கு கண்ணீர் மல்க தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மன்னிப்பு கோரியுள்ளார் ஜோகோவிக்.

ஏற்கனவே பாகிஸ்தானின் 3 கிரிக்கெட் வீரர்களுக்கும் வங்கதேசத்தின் 4 கிரிக்கெட் வீரர்களுக்கும் தென்னாப்பிரிக்காவின் 7 கிரிக்கெட் வீரர்களுக்கும் கரோனா வைரஸ்  உறுதியானது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

புதியது பழையவை