நடிகை வனிதா விஜயகுமாருக்கு தற்போது 39 வயதாகிறது. இவர் நடிகர் விஜயகுமாரின் மகள் ஆவார். 2000 ஆம் ஆண்டு தனது 19 வயதில் ஆகாஷ் என்பருடன் முதல் திருமணம் செய்துகொண்டார். 2005ம் ஆண்டு இந்த திருமணம் கசப்பானது. பின்னர் 2007 ஆம் ஆண்டு ராஜேஷ் ஆனந்த் என்பவருடன் திருமணமானது .இந்த திருமணமும் மூன்று வருடம் தான் நிலைத்தது. இவருக்கு விஜய் ஸ்ரீஹரி, ஜோதிகா விஜயகுமார், ஜ்ய்னிதா  விஜயகுமார் ஆகிய மூன்று குழந்தைகள் இருக்கின்றனர் இந்நிலையில் வனிதா விஜயகுமார் தனது நண்பரான பீட்டர் பால் என்பவருடன் தற்போது திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.


இந்த திருமணம் அவர்களது வீட்டில் எளிமையான முறையில் நடைபெற்று முடிந்திருக்கிறது. இன்று பீட்டர் பால் அவரது வீட்டில் மோதிரம் மாற்றி எளிமையான முறையில் இந்த திருமணம் முடிந்து இருக்கிறது. இந்த மூன்றாவது திருமணம் தன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக இருக்கப்போகிறது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் வனிதா. வனிதா ஏற்கனவே தனது குடும்பத்தினருடன் சொத்து தகராறில் வனிதா ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சர்ச்சை கதாபாத்திரமாக இருந்து வந்தார் இவர். தற்போது யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி தனது வீட்டில் நடப்பதையும் சமையல் நிகழ்ச்சியை அதில் பதிவு செய்து பொழுது பக்கி வருகிறார்.Post a Comment

புதியது பழையவை