சமகாலத்தில் மிகச் சிறந்த வீரர்களாக இருக்கும் விராட் கோலி மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் மூன்று விதமான போட்டிகளிலும் அடித்து நொறுக்குவதில் வல்லவர்கள். ஸ்டீவன் ஸ்மித் டெஸ்ட் போட்டியில் முதல் இடத்திலும் விராட் கோலி ஒருநாள் போட்டியிலும் முதல் இடத்திலும் இருக்கிறார். அதே நேரத்தில் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி இரண்டாம் இடத்திலும் ஸ்டீவன் ஸ்மித் ஒருநாள் போட்டிகளில் 8வது இடத்தையும் பிடித்துள்ளார். பெரும்பாலும் எந்த ஒரு வீரரிடமும்  நேர்காணல் வைத்தால் கண்டிப்பாக இந்த இருவரில் யார் மிகச்சிறந்த வீரர் என்ற கேள்வி கேட்கப்படும். அதேபோல்தான் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரிடமும் இந்த கேள்வி வைக்கப்பட்டது.
 அதற்கு அவர் கூறியதாவது...


 வரும் டிசம்பர் மாதம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே போட்டி நடக்கிறது. போட்டி பேட்ஸ்மேனுக்கும் பந்துவீச்சாளருக்கும் இடையில் தான், இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில்தான் ஆனால் விராட் கோலிக்கும் ஸ்டீவன் ஸ்மித்க்கும் இடையில் இல்லை
 இருவருமே மூன்று விதமான போட்டிகளிலும் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள். இருவரையுமே விட்டுக் கொடுத்துவிட முடியாது. அந்த அளவிற்கு சிறப்பாக ஆடுபவர்கள் என்று மழுப்பலாக பதில் கூறினார் டேவிட் வார்னர்.


Post a Comment

புதியது பழையவை