நடிகை அதிதி ராவ் ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர். டெல்லி6, ராக்ஸ்டார் 3, பத்மாவத் ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய கார்த்திக் நடித்த காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்திற்கு பின்னர் மீண்டும் மணிரத்னம் இயக்கிய செக்கச்சிவந்த வானம் படத்திலும் நடித்தார். அதனைத் தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் இயக்கிய சைக்கோ படத்திலும் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்துள்ளார் .தற்போது விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார், நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் வெளியாகும் சினாமிகா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் .மேலும் வரலாற்று காவியம் பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இன்ஸ்டாகிராமில் மற்ற நடிகைகளைப் போலவே ஆக்டிவாக இருக்கும் இவர் பிரபல வார இதழ் ஒன்றுக்கு கட்டுக்கடங்காமல் அட்டைப் படத்திற்கு போஸ் கொடுத்து ரசிகர்களை அசத்தியுள்ளார்.


Post a Comment

புதியது பழையவை