ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கோசம் போட்டு பிரபலமானவர் ஜூலி. அதன் பின்னர் நடந்த முதல் பிக் பாசில்  கலந்துகொண்டு ஓரளவிற்கு பிரபலமானார். பின்னர் விமல் நடித்த ஒரு படத்திலும் அதன் பின்னர் சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது இரட்டை மனநிலை இருப்பது போல் நடந்து கொண்டவர் ஜூலி.

மேலும் கிடைக்கும் புகழை எவ்வாறு சரியான முறையில் நேர்த்தியாக பயன்படுத்திக் கொள்ள் தெரியாமல் இஷ்டத்திற்கு ஆடிக்கொண்டிருந்தார். ஜல்லிக்கட்டு போராட்டத்தை போலவே தொடர்ந்து ஒரு சில போராட்டங்களிலும் தனது முகத்தை காண்பித்தார்.

செவிலியர் இவர். தனது செவிலியர் பணியையும் விட்டுவிட்டு திரைப்படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார். இந்நிலையில் இவருக்கு தற்போது 25 வது பிறந்தநாள் சமீபத்தில் வந்து இருக்கிறது. இதனை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஜூலி. இவருக்கு ஏற்கனவே ஒரு பாய் பிரண்டு இருந்து அவருடன் தற்போது பிரேக்கப் செய்துவிட்டு வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.Post a Comment

புதியது பழையவை