நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார் நேற்று பீட்டர் பால் என்னும் திரைப்பட கலைஞரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் பீட்டர்பாலின் வீட்டில் எளிமையான முறையில் நடைபெற்றது. சமூக வலைதளங்களில் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு சிக்கல் உருவாகியுள்ளது.

பீட்டரின் முதல் மனைவியான எலிசபெத் இன்னும் இவரை விவாகரத்து செய்யவில்லை போலிருக்கிறது. விவாகரத்து செய்யும் முன்னரே வனிதாவை பீட்டர் பால் திருமணம் செய்து கொண்டார் என்று வடபழனி காவல் நிலையத்தில் எலிசபெத் தற்போது புகார் கொடுத்துள்ளார். இருவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.


கடந்த 7 வருடமாக கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் வனிதாவை திருமணம் செய்யும்போது கண்டிப்பாக தன்னை விவாகரத்து செய்துவிட்டு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு விவாகரத்தை செய்யாமலேயே நடைமுறைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் போதே வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக புகார் கொடுத்துள்ளார் எலிசபெத் ஹெலன். இதனால் தற்போது ரசிகர்கள் இதனை சமூகவலைதளத்தில் விவாதமாக பேசி வருகின்றனர்.


Post a Comment

புதியது பழையவை