கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி வருகிறது. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு காலகட்டத்தில் இது ருத்ரதாண்டவம் மாறிவருகிறது. ஒவ்வொரு அரசாங்கமும் வித்தியாசமான சிகிச்சை முறையை மேற்கொண்டு வருகிறது. தடுப்பூசி இல்லாத காரணத்தினாலும் சரியான நிவாரணி மருந்து இல்லாத காரணத்தினாலும் இந்த முறை பின்பற்றப்படுகிறது.

குறிப்பாக எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் இந்த கரோனா வைரசை எளிதில் வென்று  விடலாம். இதன் காரணமாக சாதாரண நோயாளிகளுக்கு பாரசிட்டமால் மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகளும் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் காய்ச்சல் குறைவாகவும் இருமல் மற்றும் சளி தொல்லை மிகவும் குறைவாக இருக்கும் கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு உப்பு கலந்த நீரை மருந்தாக பயன்படுத்த புதிய ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.

ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதனை தயாரித்து வருகின்றனர்.. குறைவாக இருமலும் சளியும் உள்ள நோயாளிகள் உப்பு கலந்த தண்ணீரை ஒரு நாளுக்கு சிலமுறை மூக்கு மற்றும் வாயில் கொப்பளிப்பதன் மூலம் கரோனா வைரசை வீழ்த்தி விடலாம் என்ற நோக்கில் இந்த ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே உப்பு கலந்த நீரை ஆசிய மக்கள் பல நூறு ஆண்டுகளாக காய்ச்சலுக்கு பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.


Ajith Kumar Lifestyle 2020 | Net Worth | Salary | House | Car | Wife | Family | Hobbies | Biography


Post a Comment

புதியது பழையவை