இந்திய பயனாளர்களின் தகவல்களை வெளிநாட்டிற்கு பகிர்ந்து விடாமல் தவிர்ப்பதற்காக இந்திய அரசு 59 சீன ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் செயலிகளை நேற்று தடை செய்தது. இதில் மிகப்பெரிய செயலில் டிக் டாக். தடை செய்யப்பட்டவுடன் பல ஆதரவு குரல்கள் இதற்காக இருந்து வந்தன. ஏனெனில் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் நேரடியாகவும் மறைமுகமாகவும் இருக்கின்றனர்.

இந்நிலையில் இதில் தடை செய்யப்பட்ட செயளிகளில் ஒன்றாக இருக்கும் டிக்டாக் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் பயனாளர்களின் தகவல்களை சீனா உட்பட எந்த ஒரு நாட்டிற்கும் நாங்கள் பகிர்வது இல்லை. எந்த அரசிற்கும் எங்களை கட்டுப்படுத்த அனுமதி இல்லை. பயனாளர்களின் தகவல் எங்களுக்கு மிகப்பெரிய முக்கியம். 14 இந்திய மொழிகளில் எங்களது சேவையை வழங்கி வருகிறோம். இதன் மூலம் கோடிக்கணக்கான பயனாளர்கள், ஆர்ட்டிஸ்டுகள், கதை சொல்பவர்கள், கல்வியாளர்கள் என அனைவரும் பயன் பெற்று வருகின்றனர் .இந்திய அரசு இது தொடர்பாக எந்த விளக்கம் கேட்டால் நாங்கள் அளிக்க தயாராக உள்ளோம் என்று அறிக்கை விடுத்துள்ளது டிக் டாக் நிறுவனம்.


Post a Comment

புதியது பழையவை