உலகம் முழுவதும் உள்ள மக்களின் அனைத்து தகவலும் தற்போது கூகுள் வசம் தான் இருக்கின்றன. ஆண்ட்ராய்டு மொபைல் உபயோகிப்பவர்கள் ஒவ்வொருவரிடன் தரவும் அவர்களிடம் இருக்கிறது. நாம் எங்கு இருக்கிறோம்? எவ்வளவு நேரம் இருக்கிறோம்? மொபைல் போனில் என்ன பார்க்கிறோம்? நமது வீடு எங்கு உள்ளது? தினமும் எங்கு தொடர்ந்து சென்று வருகிறோம்? என்ன பொருட்களை வாங்குகிறோம்? எங்கிருந்து வாங்குகிறோம்?
எப்போதெல்லாம் 18+ பார்க்கிறோம்? எந்த தளத்திலிருந்து பார்க்கிறோம்? என அனைத்தும் கூகுளிடம் சேவ் செய்யப்பட்டு இருக்கிறது. குறிப்பாக கூகுள் குரோம் பயன்படுத்தி இவற்றையெல்லாம் செய்வதன் காரணமாக நம் அனைத்து டேட்டாக்களும் கூகுலிடம்  இருக்கிறது. இந்நிலையில், கூகுள் நிறுவனம் தற்போது கூகுள் குரோமில் உள்ள பயனர்களின் ஹிஸ்டரி தேடுதலை 18 மாதங்களுக்கு பின்னர் தானே நீக்கி விடுவதாக தெரிவித்துள்ளது.

மேலும் இது ஆட்டோமேட்டிக்காக நாம் பயன்படுத்தவில்லை என்றால் அந்த ஹிஸ்டரி அனைத்தும் அழிந்துவிடும் என்றும் கூகுள் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. இதில் யூடியூபில் தேடும் தகவல்கள், லொகேஷன் டிராக்கிங், வலைதள தேடும் தகவல்கள் என அனைத்தும் அடங்கும். மேலும் இன்கோகினிடோ டேப் மூலம் தேடும் தகவல்கள் அனைத்தும் கூகுள் நிறுவனம் எப்போதும் save செய்வதில்லை என்றும் தற்போது தெரிவித்திருக்கிறது.


Post a Comment

புதியது பழையவை