திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக மக்கள் பணியில் மும்முரமாக இருக்கிறார். எதிர்க்கட்சி தலைவராக ஆளும் அரசை எதிர்த்து கண்டனங்களையும் ஆலோசனைகளையும் கொடுத்து வருகிறார். இதற்கு ஆளும் கட்சி பெரிதாக செவிசாய்க்கவில்லை என்றாலும் தொடர்ச்சியாக தனது வேலைகளை செய்து வருகிறார்.

இந்த சமயத்தில் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் வேலையில் எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற ஒரு முன்னெடுப்பை எடுத்து தனது எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களை வைத்து மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.இந்நிலையில் சமீபத்தில் இவர் லண்டன் சென்று ஒரு பிரத்யேக அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தனது முடியை தற்போது மாற்றி அறுவை சிகிச்சை செய்து வந்துள்ளார் ஸ்டாலின். இந்த செய்தி அரசியல் வட்டாரத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே கடந்த சில வருடங்களுக்கு முன்னரும் இதே அறுவை சிகிச்சையை அவர் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இவருக்கு தற்போது 67 வயதாகிறது.


Post a Comment

Previous Post Next Post