சென்னையில் கடந்த 20ஆம் தேதி முதல் பொதுமக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி வரும் பொதுமக்களை போலீசார் கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி சென்னை திருவான்மியூர் சிக்னலில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
 அப்போது அந்த வழியே இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் சிங் தனது காரில் வேகமாக சென்று கொண்டிருந்தார். அவரை நிறுத்தி ஏன் போக்குவரத்து விதிகளை மீறி கொண்டும் பொது முடக்கத்தை மீறிக் வெளியே சுற்றுவது ஏன் என்று போலீசார் கேட்டனர். அதற்கு அவர் தனது காரில் அத்தியாவசிய பொருள் வாங்குவதற்காக வெளியே செல்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும், சிறப்பு உதவி ஆய்வாளர் அவரிடம் ஈ-பாஸ் இருக்கிறதா என்று கேட்டுள்ளார். அதற்கு ராபின் சிங் ஆங்கிலத்தில் பதில் அளித்ததாக தெரிகிறது எதனால் உதவி ஆய்வாளருக்கும் ராபின் சிங்கிற்கும் மொழி பரிமாற்றத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த முரண் காரணமாகவும், ஈ-பாஸ் இல்லாததாலும் அவரது காரை போலீசார் பறிமுதல் செய்தும் பொது முடக்க நேரத்தில் வெளியில் சுற்றி வந்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர் ..


Post a Comment

புதியது பழையவை