கடந்த சில நாட்களுக்கு முன்னர் சாத்தான்குளம் மொபைல் கடை வியாபாரிகளான அப்பா ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட கடை தருவதாக கூறி காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் விசாரணையின்போது கொடூரமாக தாக்கப்பட்டு கடுமையாக துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இந்நிலையில் இருவரது கொலைக்குப் காரணமானவர்கள் என்று கூறப்படும் உதவி ஆய்வாளர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.
இந்நிலையில் பொதுமக்கள் கடுமையாக போராட்டம் செய்து வரும் நிலையில் புதிய ஆய்வாளராக வடசேரி காவல் நிலைய ஆய்வாளராக இருந்த பெர்னாட் சேவியர் என்பவரே நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது இவர் புதிய காவல் நிலைய ஆய்வாளராக பதவி ஏற்றிருக்கும் நிலையில் விசாரணையின்போது கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்ட இருவருக்கும் நீதி கிடைக்குமா என்று பொதுமக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.


Post a Comment

புதியது பழையவை