சாத்தான்குளம் லாக்கப் கொலை வழக்கு தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. மேலும், அந்த குறிப்பிட்ட காவல் நிலையத்தில் பணிபுரிந்த பல காவலர்கள் பல்வேறு கிரிமினல் நடவடிக்கைகளில் தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது. இந்த லாக்கப் மரணம் குறித்து விசாரணை நடத்தி வந்த மாவட்ட நீதிபதியிடம் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளராக குமார், துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாப், கான்ஸ்டபிள் மகாராஜா ஆகியோர் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் நீதிபதி இடமே தகாத வார்த்தைகளை பயன்படுத்தி அவமரியாதை செய்துள்ளனர்.


காவல் துறையைச் சேர்ந்த இந்த மூவரும் ‘உன்னால் ஒன்னும் புடுங்க முடியாது டா’ என்று நீதிபதியை கண்டபடி பேசியுள்ளனர். இதனை நீதிபதி தனது விசாரணை அறிக்கையிலும் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கையை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இவர்களுக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை அமர்வு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி விசாரணை நடத்தி வருகிறது. மாவட்ட நீதிபதிக்கு இந்த நிலைமை என்றால் சாமானிய மக்களை இந்த காவல்துறையினர் எப்படி நடத்தி இருப்பார்கள் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது..Post a Comment

புதியது பழையவை