நடிகை பூர்ணா கேரளாவை சேர்ந்தவர். இவருக்கு தற்போது 31 வயதாகிறது. தமிழில் கிட்டத்தட்ட 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆடுபுலி, ஜன்னலோரம், தகராறு, கொடிவீரன், சவரக்கத்தி, காப்பான், சகலகலா வல்லவன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 


இவருக்கு வயது ஆகிவிட்டதால், இவரது பெற்றோர் திருமண ஏற்பாடு செய்து இருந்தனர் .அப்போது துபாயை சேர்ந்த ரபீக் என்ற நபர் திருமணம் செய்து கொள்வதாக பூர்ணாவின் குடும்பத்துடன் நெருங்கிப் பழகி நட்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். திடீரென ஒருநாள் துபாயில் தனது பிசினஸ் ஒன்றிற்கு 10 லட்சம் ரூபாய் பணம் தருவதாக அவசரஅவசரமாக போன் செய்து உதவி கேட்டுள்ளார். ஆனால் இது குறித்து நான் பிறகு முடிவு சொல்கிறேன் நீங்கள் முதலில் வீடியோ கால் செய்யுங்கள், என்ன பிரச்சனை என்று நான் பார்க்க வேண்டும் என்று கேட்டுள்ளார் பூர்ணா.


 உடனடியாக சுதாரித்துக் கொண்ட அந்த ரபிக் என்ற நபர் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு ஓடிவிட்டார். மேலும், பூர்ணாவின் கேரியரை காலி செய்வதாக பெற்றோரை மிரட்டியுள்ளார் இதன் காரணமாக அவரது பெற்றோர் உடனடியாக கொல்லம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 


விசாரணையில் இவ்வாறு மோசடிக்கு துணை இருந்தது வேறு யாருமில்லை பூர்ணாவின் மேக்கப் கலைஞர் தான் என்று தெரியவந்துள்ளது. கூட இருந்துகொண்டே பூர்னாவிற்கு குழிபறித்த அந்த நபரை தற்போது போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்


18+ உலகம் முழுவதும் ஆண்கள் உடலுறவின் போது செய்யும் தவறுகள் இவைதானாம்... இனிமேலாவது பண்ணாம இருங்க...!Post a Comment

புதியது பழையவை