கிரிக்கெட்டிற்கென பிரத்தியேகமாக பல ஆய்வுகளை நடத்தி பரிசுகளை வழங்கும் இதழ் விஸ்டன் வருடாவருடம் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து வெளியிடும். இந்நிலையில் கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவின் மிகச்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் யாரென்று ஆன்லைனில் ஒரு ஓட்டெடுப்பில் வைத்திருந்தது.

14 பேர் கொண்ட இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் , சுனில் கவாஸ்கர், விராட் கோலி ஆகியோர் இறுதி சுற்றுக்கு தேர்வு பெற்றனர். இதிலிருந்து ஒருவரை தேர்வு செய்ய 11400 ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் ராகுல் டிராவிட் மொத்தம் 52 சதவீத  வாக்குகள் பெற்று சச்சின் டெண்டுல்கரை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார்.
இதன் காரணமாக கடந்த 50 ஆண்டுகளில் சிறந்த இந்திய டெஸ்ட் கேப்டன் ராகுல் டிராவிட் என்று லிஸ்டன் இதழ் அறிவித்துள்ளது. ராகுல் டிராவிட் இந்தியாவிற்காக 1996 முதல் 2012ஆம் ஆண்டு வரை 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13288 ரன்களை குவித்துள்ளார். இதன் சராசரி 52.31 ஆகும் அதேநேரத்தில் சச்சின் டெண்டுல்கர் 1989 முதல் 2013ஆம் ஆண்டுகளில் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15929 ரன்களைக் குவித்துள்ளார் இதன் சராசரி 53.81 ஆகும்.


               

Post a Comment

புதியது பழையவை