கடந்த 2017ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்ததன் காரணமாக அவருக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை இல்லை. அதனை தொடர்ந்து அவரது தோழி சசிகலாவிற்கு நான்கு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.நான்கு வருடத்திற்கு முன்னதாகவே வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு சசிகலா விடுதலை பெறுவார் என்று பாஜக பிரமுகர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கர்நாடக சிறைத்துறை வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீசாக கூடியவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் சசிகலாவின் பெயர் இல்லை என்று உறுதியாகியுள்ளது. எப்படிப் பார்த்தாலும் சசிகலா தமிழகத்தில் 2021 ஆம் தேதி நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் பிப்ரவரி மாதமே விடுதலை ஆகி விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

புதியது பழையவை