தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மொபைல் கடை வியாபாரிகள் ஆக இருந்த பெனிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் துன்புறுத்தப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்து தங்களது எதிர்ப்பினை பதிவு செய்து வரும் வேளையில் தற்போது அதுகுறித்த ஒரு ஆடியோ கால் ரெக்கார்ட் ஒன்று வெளியாகியுள்ளது.


இதில் கோவில்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் ஒரு காவலர் மற்றும் அவரது உறவினர் இருவரும் பேசிக் கொள்கின்றனர். இதில் குறிப்பாக கோவில்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் காவல் நிலையத்திற்கு வரும் அனைவரையும் மனரீதியாக தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக பேசியுள்ளனர்.


மேலும் ஆய்வாளர் கணேஷ் இப்படி விசாரணை கைதிகள் என்று அழைத்து வரும் பலரையும் இரவு ஒரு மணிவரை கட்டிவைத்து கண்டிப்பாக அடிக்க வேண்டும் என்று சக காவலர்களை வற்புறுத்தியும் வந்துள்ளதாக தெரிகிறது. மேலும் 10 நாட்களுக்கு முன்னர் கூட இதே போன்று ஒருவரை அழைத்து வந்து விசாரணை என்ற பெயரில் அடித்து துன்புறுத்திய போது அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.


அவரும் சில நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டு வாக்குமூலம் கொடுத்து விட்டு இறந்து போயுள்ளார். இந்த செய்திகள் அனைத்தும் இந்த ஆடியோவில் பதிவாகியுள்ளது. குறிப்பாக மேலே குறிப்பிடப்பட்ட காவலர்கள் அனைவரும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்னும் ஒரு அதிகாரம் இல்லாத அமைப்பிடம் முழு அதிகாரத்தையும் கொடுத்து பொதுமக்களை துன்புறுத்தி வந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.


பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் ஆகிய இருவரையும் சாகும் அளவிற்கு அடித்ததும் இந்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்று அழைக்கப்படும் அரசு அதிகாரமற்ற அமைப்பின் ஆட்கள்தான் என்று தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. இதில் ஆய்வாளர் ஸ்ரீதர் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் உதவி ஆய்வாளர் துறை உதவி ஆய்வாளர் ரகு என்ற கொம்பன், காவலர் ஜேசுராஜ், காவலர் காவலர் பாலா கணபதி கண்ணன், ஜேக்கப், எலிசா ஆகிய 12 பேரும் இந்த மரணத்திற்கு உடந்தையாக உள்ளனர். மேலும் சாத்தான்குளம் அரசு மருத்துவர் போலியாக ரிப்போர்ட் கொடுத்துள்ளது வெளியாகியுள்ளது. பொருத்திருந்து பார்ப்போம் இந்த அதிமுக அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது. தற்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் முகஸ்டாலின் இந்த இரட்டை கொலை வழக்கு சிபிஐ விசாரணை கண்டிப்பாக தேவை என்று வலியுறுத்தி வருகிறார்.Post a Comment

புதியது பழையவை