கொரோனவைரஸ் உலகம் முழுவதும் பேர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது வரை கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர் .


இந்த பாதிப்பு சாதாரண மக்களுக்கு மட்டும் இல்லை, கிரிக்கெட் வீரர்கள் , கால்பந்து வீரர்கள், நடிகர், நடிகைகள் என பல செலிபிரிட்டிககளை தாக்கியுள்ளது.


 சமீபத்தில் பாகிஸ்தானின் முன்னாள் கேப்டனும் அதிரடி வீரருமான சாகித் அப்ரிடியியையும் கோரோணா தாக்கியது.

 இதன் காரணமாக தற்போது வரை அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.


 அதனை தொடர்ந்து வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் மோஷரபி மோர்தசாவிற்கும் கோரோணா தொற்று ஏற்பட்டது. அந்த நாட்டில் மேலும் மூன்று கிரிக்கெட் வீரர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 இதனை தொடர்ந்து தென்ஆப்பிரிக்க வீரர்கள் 7 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளது தற்போது செய்தியாக வெளிவந்துள்ளது. இதனை அந்நாட்டு ஊடகங்கள் செய்தியாகா  வெளியிட்டுள்ளது. இதில் டேவிட் மில்லர், டேல் ஸ்டைன் போன்றோர்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.


 அதனைத் தாண்டி இவர்களது பெயரை வெளியிடுவது சட்டப்படி குற்றம் என்பதால் தென்னாப்பிரிக்க பத்திரிகைகள் இந்த ஏழு பேர் பெயரை வெளியிடவில்லை.


Post a Comment

புதியது பழையவை