விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். கரோனா வைரஸ் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் திரைக்கு வர உள்ளது.


 இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தின் அப்டேட்கள் கொஞ்சம் கொஞ்சமாக கசியத் துவங்கி உள்ளது. குறிப்பாக அடுத்த படத்தில் விஜய் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தற்போது வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு சிறிய பட்ஜெட் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு பிறகு சூர்யாவுடன் ஒரு படத்திலும் அதன்பின்னர் விஜய்யுடன் ஒரு படத்திலும் கமிட் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .


அப்படி இந்த படம் உறுதியானால் படத்திற்கு  ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராகவும் முன்னணி கதாநாயகிகள் இருவர் உடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படம் கிராமப்புறத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை கமர்ஷியலாக எடுத்துக் கூறும் வண்ணம் இருக்கும் என்று தெரியவந்துள்ளது.


Post a Comment

புதியது பழையவை