தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து விட்டன . டிரைலர் டீசர் வெளியாகி படம் மட்டும் திரைக்கு வந்து விட்டால் போதும். இதன் காரணமாக தனது அடுத்தப்பட வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார் விஜய். மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் விஜய்க்கு ஜோடியாக நடித்து இருந்தாலும் ஆண்ட்ரியா மற்றும் ரம்யா ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது


                                     

 இதே பாணியில் விஜய்யின் 65 வது படமான அடுத்த படத்தில் முருகதாஸ் மூன்று கதாநாயகிகளை நடிக்க வைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு முன்னணி கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனாவும், வில்லி கேரக்டரில் நிக்கி கல்ராணியும் மற்றொரு கதாநாயகி வேடத்தில் சமந்தாவும் நடிக்க உள்ளதாக தற்போது செய்திகள் கசிந்துள்ளது.


 

இதுமட்டுமல்லாமல் இன்னொரு முன்னணி நடிகையும் குணசித்திர கதாபாத்திரத்தில்  படத்தில் நடிக்கப் போகிறார். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க போகிறது. முருகதாஸ் இயக்கும் இந்த படத்தின் அப்டேட்கள் வெகு சீக்கிரத்தில் வெளியாகும் என்று தெரிகிறது


Post a Comment

புதியது பழையவை