ஆந்திர மாநிலத்தில் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக அரசு அலுவலகங்கள் பகுதி ஊழியர்களுடன் இயங்கிவருகிறது.

இந்நிலையில்,  ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள அரசுக்குச் சொந்தமான சுற்றுலாத்துறையின் ஹோட்டல் மேனேஜர் ஒருவர் தன்னுடன் பணிபுரியும் மாற்றுத்திறனாளி பெண்ணிடம் கடுமையாக நடந்து கொண்டுள்ளார். சம்பந்தப்பட்ட  பாஸ்கர் என்ற அந்த மேனேஜர் அலுவலகத்திற்குள் வரும்போது மாஸ்க் அணிந்து வருமாறு அந்த பெண் அறிவுறுத்தியுள்ளார்.

 இதன் காரணமாக தன்னை விட கீழ் நிலையில் இருக்கும் ஒரு அலுவலக பெண் ஊழியர் தன்னை எப்படி கேள்வி கேட்பது, என்று கூறி ஆத்திரமடைந்து இருக்கிறார் பாஸ்கர். இதனால் அருகில் இருந்த கம்பியை எடுத்து சரமாரியாக அடித்து தாக்கினார்.

 இதை பார்க்கும் நமக்கே பதைபதைக்கிறது. மேலும், அவரது முடியை இழுத்து தரையில் வைத்து ஏறி மிதிக்கிறார். மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை இவ்வாறு எப்படி ஒரு சராசரியான மனநலம் சரியாக உள்ள மனிதனால் கொடூரமாக தாக்க முடிகிறது என்ற கேள்வி நமக்குள் எழுகிறது.

 இந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது வைரல் ஆகி உள்ளது. இதனால் உடனடியாக பாஸ்கர் என்ற அந்த அரசு ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒருவேளை இந்த சிசிடிவி காட்சிகள் வெளிவராமல் இருந்திருந்தால் இன்னும் என்னவெல்லாம் அடங்கியிருக்கும் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

Post a Comment

புதியது பழையவை