தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரு நாள் மட்டும் 4,979 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. குறைந்தபாடில்லை.


 தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் இன்று ஒரு நாள் மட்டும் 4979 பேருக்கு உறுதியாகி இருக்கிறது இதன் மூலம் தமிழகத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 693 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 85 ஆயிரத்து 859 ஆக மாறியுள்ளது அதிகமாக பரிசோதனை செய்யும் போது அதிகமாக கொரோனா  வைரஸ் எண்ணிக்கை வெளிவருகிறது. இதன் காரணமாக தற்போது மேலும் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை இன்று மட்டும் 78 ஆக இருக்கிறது மொத்த பலி எண்ணிக்கை 2489 ஆக உயர்ந்துள்ளது.


Post a Comment

புதியது பழையவை