விஷால் தற்போது தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கி நடத்தி வருகிறார். தமிழகத்தில் KGF  படத்தை அவர் தான் வாங்கி வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது மிஷ்கினிடம் இருந்து வற்புறுத்தி வாங்கிய துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை தானே இயக்கி நடித்து தயாரித்து வருகிறார் விஷால் .மேலும் சில படங்களையும் தற்போது தனது விஷால் பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

இந்த தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஒருவர் முறைகேடாக 45 லட்சம் ரூபாய் வரை சுருட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மோசடியால் விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி மேலாளர் அந்த பெண் மீது புகார் கொடுத்துள்ளார்.

இந்த பணத்தை வைத்து அந்தப் பெண் ஒரு வீடு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது இந்த தகவல் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Post a Comment

புதியது பழையவை