தமிழ் சினிமாவில் விஷால் நடித்த பட்டத்து யானை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா . இவர் நடிகர் அர்ஜூனின் மகள் ஆவார். கடைசியாக அர்ஜுன் இயக்கத்தில் உருவான சொல்லிவிடவா என்ற படத்தில் நடித்திருந்தார்.  இந்த நிலையில் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா அர்ஜுன்.

 

மேலும் இவர் ஊரடங்கு ஆரம்பித்ததில் இருந்து வெளியே செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த ஊரடங்கு காலத்தில் பல புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். இதில் ஒரு புகைப்படம் கூட இவர் வெளியே இருக்கும்படி இல்லை .இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…
எனக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வீட்டிலேயே என்னை நான் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். மேலும் என்னை கவனித்துக்கொள்ள ஒரு மருத்துவ குழு எனது வீட்டில் இருக்கிறது. என்னை கடந்த சில நாட்களாக சந்தித்த நபர்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் மாஸ்க் அணியுங்கள் என்று தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா அர்ஜுன்.


 

Post a Comment

புதியது பழையவை