அசாம் மாநிலத்தில் தற்போது தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக இந்த காற்றாற்று மழை காரணமாக பெருவெள்ளம் அடித்துக் கொண்டிருக்கிறது. இந்த கனமழையால் பிரம்மபுத்திரா உள்ளிட்ட பெரும் ஆறுகள் மற்றும் கிளை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.இதன் காரணமாக கரையோரமாக இருந்த பெரும்பாலான மாவட்டங்கள் பாதித்துள்ளது. மொத்தம் 27 மாவட்டங்கள் பாதித்துள்ளது. 40 லட்சம் மக்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர் .


 

அதனை தாண்டி 97 பேர் இதனால் இறந்து போயுள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் இது பெரிய சேதம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 303 நிவாரண முகாம்கள் அமைத்து நிவாரணம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் தேசிய ஊடகங்கள் இதனை துளியும் கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment

புதியது பழையவை