உலகம் முழுவதும் கரோனா வைரசுக்கு எப்படியாவது தடுப்பூசி கண்டுபிடித்து விட வேண்டும் என்று மருத்துவ நிபுணர்களும் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் கடுமையாக உழைத்து வருகின்றனர். இந்நிலையில் ரஷ்யாவின் மாஸ்கோ மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உலகின் முதல் கரோனா வைரஸ் தடுப்பூசி வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டு முடிவடைந்துள்ளது என்று அறிவித்துள்ளனர்.

 

மேலும் தற்போது இந்த வைரஸ் தடுப்பூசி சோதனை செய்யப்பட்ட தன்னார்வலர்கள் இன்னும் ஆறு நாட்கள் வைத்து சோதனை செய்யப்பட்டு பொதுவெளியில் விடப்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளது. இந்த பரிசோதனை ஜூன் 18-ம் தேதி துவங்கியது .தொடர்ச்சியான சோதனைகள் தற்போது வெற்றி அடைந்து இருப்பதாக அந்த பல்கலைக்கழக இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இதனையடுத்து ரஷ்ய அரசின் அனுமதி உலக சுகாதார நிறுவனத்தின் அனுமதி கிடைத்த பின்னர் இதனை உலகிற்கு அளிக்கும் எனவும் அந்த குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

Post a Comment

புதியது பழையவை