ஒரே நாளில் புதிய உச்சத்தைத் தொட்ட கொரோனா!!! சென்னையை தவிர்த்து பிறமாவட்டங்களின் எண்ணிக்கை 5000த்தை தாண்டியது.

தமிழக சுகாதாரத்துறை இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று ஒரே நாளில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வரலாறு காணாத அளவாக 6,472 ஆக எகிரியுள்ளது. 

  Corona Tamilnadu FOGTamil

தமிழகத்தில் சென்னையைக் காட்டிலும் பிறமாவட்டங்களின் கொரோனா பாதிப்பு 5136 என புதிய உச்சத்தை எட்டியது. சென்னையில் இன்றைய பாதிப்பு 1336. மேலும் இன்று மட்டும் 88 பேர் உயிர் இழந்துள்ளதாகவும் இதனால் தமிழகத்தில் மொத்த உயிர் இழந்தோரின் எண்ணிக்கை 3,232என எட்டியுள்ளது.

Corona Tamilnadu FOGTamil

கொரோனா பாதிப்பிலிருந்து இன்று குணமடைந்தோரின் எண்ணிக்கை 5210 ஆகவும் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,36,793 ஆக உள்ளது.

Corona Tamilnadu FOGTamil

தமிழக சுகாதாரத்துறையின் அறிக்கையின்படி இன்று மொத்தம் 60,375 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் பரிசோதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 20,75,522 ஆகவும் அதில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,92,964 ஆக உள்ளது.

Post a Comment

புதியது பழையவை