கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காத அளவில் பெருகி வந்தது. எண்ணிக்கையில் சிறிதளவும் பாரபட்சம் காட்டாமல் பிற மாவட்டங்களை விட மிகவும் அதிகமாவே ஏறிக்கொண்டே இருந்தது. தற்போது என்ன தான் சென்னையில் கொரோனா பரவலின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் பிற தமிழக மாவட்டங்களில் எண்ணிக்கை அதிகரித்து வருவது வருத்தத்திற்குரியது.


இதுவரை சென்னையில் 87,235 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 1298 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இருந்தாலும் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 70651ஆக உயர்ந்துள்ளது. 15127 பேர் கொரோனா தொற்றிற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆகையால் சென்னையில் கொரோனா தொற்றிலிருந்து 81 சதவிகிதம் பேர் குணமடைந்து இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்நிலை நீடித்தால் வரும் ஜூலை 31க்குள் சென்னை பச்சை மண்டலமாக மாறவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும் கொரோன பரவலின் இரண்டாவது  அலை வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

புதியது பழையவை