உலகம் முழுவதும் ஊரடங்கு காலத்தில் எந்த ஒரு போட்டியிலும் நடைபெறவில்லை. 117 நாட்களாக கிரிக்கெட் போட்டிகளும் தடைப்பட்டிருந்தது. இந்நிலையில் நான்கு மாதங்கள் கழித்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகின்றன.

 

முதல் டெஸ்ட் போட்டி கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் இங்கிலாதின் சவுதாம்டன் மைதானத்தில் துவங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 308 ரன்கள் அடித்து 104 ரன்கள் லீட் வைத்தது .

 

மீண்டும் இரண்டாவது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 313 ரன்கள் அடித்து இங்கிலாந்துக்கு 200 ரன்கள் இலக்காக வைத்தது. இதனை தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி துவக்கம் முதலே தடுமாறியது. ஆனால் அந்த அணியின் ஜெர்மைன் பிளாக்வுடஸ் நிதானமாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்த போட்டியில் 9 விக்கெட் வீழ்த்திய Shannon Gabrielஆட்டநாயகன் விருதை பெற்றார்.

Post a Comment

புதியது பழையவை