ஆரம்ப காலகட்டங்களில் ஐபிஎல் தொடரில் ஆடிய அணிகளில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் ஒன்று. இந்த அணி 4 ஐபிஎல் தொடர்களில் ஆடியது இதில் 2009 ஆம் ஆண்டு கோப்பையையும் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு வங்கி உத்தரவாத தொகையை செலுத்தினால் இந்த அணியை தொடரில் இருந்து நீக்கியது பிசிசிஐ. பிசிசிஐயின் இந்த நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடியது டெக்கான் சார்ஜர்ஸ் அணி. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை ஐபிஎல் தொடரில் இருந்து நீக்கியது விதிகளுக்கு புறம்பானது. இது சட்ட விரோதமானது என அறிவித்து. 4714 கோடி ரூபாயை டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு இழப்பீடாக கொடுக்க உத்தரவிட்டுள்ளது. 2012-ம் ஆண்டிலிருந்து எட்டு வருடங்களுக்கு 10 சதவீத வட்டியும் சேர்த்து வழங்க வேண்டும் என்று அறிவித்துள்ளது இதன்காரணமாக பிசிசிஐ சிக்கலில் மாட்டியுள்ளது.


Post a Comment

புதியது பழையவை