ஆரம்ப காலங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு அதன் பின்னர் தனது திறமையின் காரணமாக படிப்படியாக வளர்ந்து தேசிய விருது பெற்றவர் நடிகர் தனுஷ். தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக இருக்கிறார். தமிழில் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் கலக்கி கொண்டிருக்கிறார். ஒரு ஹாலிவுட் படத்திலும் நடித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஒரு நடிகராக மட்டுமில்லாமல் ஒரு பாடகராக இயக்குனராகத் தன்னை வெறுகேற்றி விட்டார் இவர். கடைசியாக அவர் நடிப்பில் வந்த அசுரன் படம் சூப்பர் சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் தனுஷ் நடித்து அடுத்தடுத்து வெளியாக உள்ள திரைப்படங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் இவர் நடித்த கர்ணன், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ஜகமே தந்திரம், கார்த்திக் நரேன் இயக்கத்தில் D43, சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் D44m செல்வராகவன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் புதுப்பேட்டை இரண்டாம் பாகம், வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் வடசன்னை இரண்டாம் பாகம், ராட்சதன் பட இயக்குனரான ராம்குமார் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு படம், அதன் பின்னர் இந்தியில் அத்ராங்கி ரே’ ஆகிய படங்கள் இன்னும் ஒரு வருடத்திற்குள் ரிலீசாகும் என்று தெரியவந்துள்ளது இது தனுஷ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைய போகிறது.

Post a Comment

புதியது பழையவை