இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 469 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதன் பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் தற்போது இங்கிலாந்து அணி 37 ரன்கள் எடுத்து 219 ரன்கள் முன்னணியில் இருக்கிறது. இப்படியே சென்றால் ஐந்தாவது நாளான இன்று இந்த போட்டி டிராவில் முடிவடையு.ம் ஏற்கனவே முதல் போட்டியில் தோற்று இங்கிலாந்து அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அடுத்த போட்டியும் டிரா ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

புதியது பழையவை