இந்த வருட ஐபிஎல் தொடர் தற்போது வரை நடக்குமா இல்லையா என்ற ரசிகர்களிடம் இருந்து கொண்டுதான் இருக்கிறது பிசிசிஐ தலைவரானார். அவங்களை எப்படியாவது ஐபிஎல் தொடரை நடத்த விட வேண்டும் என்ற முனைப்பில் தான் இருக்கிறார்.

 


அப்படி நடக்கவில்லை என்றால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு 4,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். இதனை சரி செய்வது அவ்வளவு எளிதல்ல. இதன் காரணமாக நியூசிலாந்து, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டில் ஐபிஎல் தொடரை நடத்தி விடலாம் என்று திட்டம் தீட்டி வருகிறது பிசிசிஐ.தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த வருடத்தின் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இதன் அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் எனவும் தெரிகிறது.

Post a Comment

புதியது பழையவை