கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்த நடிகைகளில் லட்சுமிமேனனும் ஒருவர். கும்கி என்ற படத்தில் அறிமுகமானார். அதன்பின்னர் சுந்தரபாண்டியன், றெக்க போன்ற படங்களில் நடித்தவர். தற்போது இவருக்கு 18 வயதாகிறது.

 

இதன் காரணமாக தனது கல்வியில் கவனம் செலுத்த சென்றுவிட்டார். இளம் வயதாக இருந்தாலும் நடிப்புத் திறமை இவருக்கு அபாரமாக இருக்கிறது. சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் பேசிய அவர் நடிப்பில் இருந்து தற்போது பிரேக் எடுத்து படிப்பில் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.


A post shared by lakshmimenon96 (@lakshmimenon967) on


வீட்டில் சும்மா இருக்கும் நேரத்தில் குச்சிப்புடி நடனம் பயின்று வருவதாக கூறியிருந்தார் லட்சுமிமேனன். இந்நிலையில் தனது வீட்டில் குச்சிப்புடி நடன பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது தரையில் இருக்கும் தண்ணீரை கவனிக்காமல் கீழே வழுக்கி விழுந்து விடுகிறார். இந்த வீடியோவை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

Post a Comment

புதியது பழையவை