நடிகை மீரா மிதுன் சென்னையை சேர்ந்தவர். அவருக்கு 32 வயதாகிறது. தமிழில் 8 தோட்டாக்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் தானாசேர்ந்தகூட்டம் ,போதை, ஏறி புத்தி மாறி என்ற படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் பிக் பாஸ் தமிழ் தொடரின் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு 35வது நாளில் இவர் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போதே பல சர்ச்சைக்குரிய செயல்களைச் செய்தவர். அதன் பின்னரும் ஆபாசமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.


 தனது ட்விட்டர் பக்கத்திலும் இப்படித்தான் ஏதாவது ஒரு பெரிய செலிபிரிட்டியை டார்கெட் செய்து அவர்களை வம்பிழுப்பார். அதன் மூலம் பிரபலம் தேடுவார். இப்படி பாலிவுட் முதல் கோலிவுட் வரை அனைவரையும் வம்பிழுத்துக் கொண்டிருந்தார்.


 இந்நிலையில் திரிஷாவின் தலையில் கை வைத்து இருக்கிறார் மீரா மிதுன். தனது ட்விட்டர் பக்கத்தில்…


 இது உங்களுக்கு லாஸ்ட் வார்னிங் திரிஷா அடுத்த முறை எனது புகைப்படத்தை வைத்து எனது தலை முடியை வைத்து உங்களது புகைப்படத்தை போட்டோஷாப் செய்து வெளியிட்டீர்கள் என்றால் தக்க நடவடிக்கை எடுப்பேன். சட்டபூர்வமாக நடவடிக்கை எடுப்பேன். போய் தொலையுங்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். இது திரிஷாவின் காதிற்கு எப்படியும் எட்டியிருக்கும் பொறுத்திருந்து பார்ப்போம் திரிஷா என்ன பதில் கொடுக்கிறார் என்று.

Post a Comment

புதியது பழையவை