சாத்தான்குளத்தில் காவல்துறையால் லாக்கப்பில் நடத்தப்பட்ட கொலைகள் குறித்து தற்போது மதுரை நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும் முன்னரே முன்னாள் பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே இதனை மடைமாற்றும் விதமாக இந்த வழக்கு கொலைக் குற்றத்திற்கு பதியப்படும் இந்திய தண்டனை சட்டம் 302 இல் வராது என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் அதன் பின்னர் தற்போது மதுரை உயர்நீதிமன்றம் சிபிசிஐடி போலீஸார் மூல்ம் கைது கொலை குற்றமாக பதிவு செய்திருக்கிறது .அப்போதே விஷயத்தை மடை மாற்ற முயற்சித்த ரங்கராஜ் பாண்டே தற்போது மேலும் ஒரு பிரச்சனைக்கு அது சிறிய தவறு என்று சிறுமைப்படுத்தியுள்ளார்.


புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலைசெய்து அப்பகுதியிலுள்ள ஊரணியில் வீசியுள்ளனர். இந்த சம்பவத்தையும் சிறிய தவறு என்று கூறி சுட்டிக்காட்டி.
சிறிய தவறுகளுக்கு கொடிய தண்டனை என்பது, காட்டில் இருக்கும் சாதுக்களையே கொதித்து எழச் செய்துவிடும். நாட்டு மக்களின் கோபம் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. 

- சாணக்யர், தண்ட நீதி, அர்த்த சாஸ்திரம்.

இது சாணக்கிய நீதி என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார் ரங்கராஜ் பாண்டே. இந்த விஷயத்தையும் இப்படி மடை மாற்றி விடலாம் என்று அவருக்குத் தோன்றி இருக்கிறது போலும். இதனால் கடுப்பான நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர் அதே நேரத்தில் பத்திரிக்கையாளர் விக்ரமன் அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்..

 

சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று புதரில் வீசியெறிவதும்,  தந்தை மகனை ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஆசனவாயில் லத்தியை விட்டு சித்ரவதை செய்து கொல்வதும் பீகாரில் சிறிய தவறாக இருக்கலாம். தமிழ்நாட்டில் சகித்துக்கொள்ள முடியாது. #JusticeforJayarajAndFenix என்று அவருக்கு பதில் ட்வீட் செய்துள்ளார்

 

Post a Comment

புதியது பழையவை