நடிகை ரிச்சா டெல்லியை சேர்ந்தவர். இவரது உண்மையான பெயர் அந்தாரா திரைப்படங்களில் நடிப்பதற்காக தனது பெயரை ரிச்சா என்று மாற்றிக் கொண்டார். இவர் 2011ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 

 

அதன் பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான மயக்கம் என்ன என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த இரண்டு திரைப்படங்களும் இவருக்கு தமிழில் நல்ல ரசிகர் பட்டாளத்தை கொண்டு வந்து சேர்த்தது. ஆனால் அதன் பின்னர் இவர் தமிழில் பெரிதாக நடிக்கவில்லை .தெலுங்கில் 6 படங்களில் நடித்தார் 2013ஆம் ஆண்டு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு அமெரிக்காவிற்குச் சென்று வணிகம் தொடர்பான படிப்பினை மேற்கொள்ள சென்றுவிட்டார் தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் இவர் ஒரு பிரபல நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார் .34 வயதான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை இந்நிலையில் இவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

.

Post a Comment

புதியது பழையவை