தமிழர்களின் கடவுளும் வடநாட்டவர்கள் கடவுளும் மிக வித்தியாசமானது என்ற கருத்தாக்கம் கடந்த பல நூறு ஆண்டுகளாக இருந்து வருகிறது. அதிலும் கடந்த பத்து ஆண்டுகளாக இந்த கருத்து வலுப் பெறத் துவங்கியுள்ளது.


 தமிழர்களின் கடவுளுக்கு மாமிசம் படைப்போம், நாங்கள் விரும்பிய செய்வோம் எங்கள் முன்னோர்கள் தான் எங்கள் கடவுள்கள் என்ற கருத்துரை இருந்துவருகிறது. மேலும் முருகன் என்ற தமிழர்களின் முன்னோரை கந்தன் என சமஸ்கிருதம் ஆக்கி வைத்து தற்போது அதை வைத்து அரசியல் நடப்பதாகவும் சமூகவலைதளத்தில் கருத்துரைகள் பேசப்பட்டு வருகிறது.

 இந்நிலையில் கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் கந்தன் என்ற கடவுளை வைத்து கந்த சஷ்டி கவசத்தை விமர்சனம் செய்திருந்தது. இதன்காரணமாக இடதுசாரி அமைப்புகள் வெகுண்டெழுந்தன

இது ஒரு பக்கமிருக்க தமிழ் தேசிய அமைப்புகள் உங்கள் கந்தன் எங்கள் முருகன் அல்ல, எங்கள் முருகன் எங்களது முன்னோர் அவர்தான், எங்கள் கடவுள் என்பது போல் டுவிட்டரில்  #SaveMuruganFromBrahmanism


என்ற ஹேஷ் டேக்கை தேசிய அளவில் ட்ரண்ட் செய்தனர் இதில் பல்வேறு கருத்துக்கள் பரப்பப்பட்டது.


Post a Comment

புதியது பழையவை