எந்த ஒரு படங்களிலும் நடிக்காமல் சர்ச்சையை வைத்தே தனது பெயரை ட்ரெண்டில் வைத்திருப்பவர் நடிகர் சிம்பு. இவருக்கு தற்போது 36 வயதாகிறது. இவரது பால்யகால தோழியான திரிஷாவிற்கு 37 வயது.


 இருவருக்குமே தற்போது திருமணம் நடைபெறவில்லை. சிம்பு ஏற்கனவே நயன்தாரா, ஹன்சிகா போன்ற நடிகையுடன் காதல் வயப்பட்டு பின்னர் பிரிந்தார். திரிஷாவிற்கும் இரண்டு முறை திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று கடைசியில் கைவிடப்பட்டது. இந்நிலையில் சிம்புவிற்கும் திரிஷாவுக்கும் திருமணம் நடக்கப் போகிறது என்ற ஒரு செய்தி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இது வெறும் ஒரு வதந்தி எனவும் திரிஷா மற்றும் சிம்பு ஆகிய இருவரும் நல்ல நண்பர்கள் எனவும் தெரியவந்துள்ளது.ஏற்கனவே திரிஷா சில வருடங்களுக்கு முன்னரேயே சிம்புவைப் பற்றி சிறந்த நண்பர் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

புதியது பழையவை