சேலம் பனமரத்துப்பட்டி அதிமுக ஒன்றிய செயலாளர் ஜெகநாதன். இவர் சில நாட்களுக்கு முன் ஏர்வாடி சென்றபோது அங்கு வீட்டில் தனியாக இருந்த ஒரு பெண்ணிடம் தவறாக பேசி தன் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதனை சிறிதும் விரும்பாத அந்த பெண் மறுத்து வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கூறியுள்ளார். ஆத்திரமடைந்த அதிமுக பிரமுகர் அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் பயந்து போன அந்த பெண் தன் கணவரிடம் நடந்த சம்பவத்தை கூற அதிர்ச்சி அடைந்த பெண்ணின் கணவர் சேலம் மாவட்ட எஸ் பி ஆபீசில் அந்த அதிமுக பிரமுகர் மேல் புகார் கொடுத்துள்ளார். நாட்கள் கடந்தும் போலீஸார் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மன மொடிந்த அந்த கணவர் ஜெகநாதனின் முகத்திரையை கிழிக்க எண்ணியுள்ளார்.


அதற்காக ஜெகநாதனின் மொபைலுக்கு கால் செய்ய அந்த பெண்ணின் கணவர் என் மனைவியை எதற்காக ஒரு நாள் கூட இருக்குமாறு கேட்டீர்கள் என்று கேக்க முதலில் அதெல்லாம் ஒன்றும் இல்லப்பா என்று எதோ சொல்லி சமாளிக்க முயன்றுள்ளார் அந்த பிரமுகர். அதற்கு பெண்ணின் கணவர் உங்க மேல பெரிய மரியாதை வச்சிருக்கேன், உங்கள நம்பி தான கட்சில இவளோ நாளா இருக்கோம் நீங்க இப்படி பண்ணலாமா என்று கேட்டுள்ளார். அதற்கு கட்சி பிரமுகர் நான் பண்ணது தப்பு தான் பா தெரியாம ஒரு வார்த்தைல வந்துருச்சு நான் வேணா நேர்ல வந்து மன்னிப்பு கேக்குறேன் என்று கூறியுள்ளார். இதனால் கொண்மடைந்த கணவர் நேர்லைய?? நீங்க இவளோ பெரிய பொறுப்புல இருக்கீங்க?? நாங்க இல்லாதவங்க தான் அதுக்குன்னு இப்படியா?? இதுக்கு நாங்க செத்தே போய்டலாம், நானும் தண்ணிய போட்டுட்டு உங்க வீட்டு வாசல்ல வந்து சத்தம் போட்டா நீங்க என்ன நினைப்பீங்க என்று கேட்க பிரமுகரோ அது என் புள்ள மாதிரி பா மன்னிச்சிடு என்று கூறியுள்ளார்.


இந்த மொத்த போன் உரையாடலையும் ரெகார்ட் செய்த அந்த பெண்ணின் கணவர் அதிமுக ஒன்றிய செயலாளரான ஜெகநாதனின் முகத்திரை கிழியும் வண்ணம் ஆடியோவை சமூக வலைதளங்களில் லீக் செய்துள்ளார். இது  சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

Post a Comment

புதியது பழையவை