நடிகர் சூர்யா "ரீல் வாழ்க்கையில்" மட்டுமின்றி "ரியல் வாழ்க்கையிலும் ஹீரோ" தான். சமீப காலங்களாக மக்களுக்கு நேர்மையான அறிவுரைகள் கூறியும், கருத்துக்களால் உக்குவித்தும் வருகிறார்.

இவர் 2006ம் ஆண்டு முதல் இன்று வரை, 14 வருடங்களாக "அகரம் தொண்டு நிறுவனம்" ஒன்று தொடங்கி அதன் மூலம் பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கும் மாணவர்களுக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும் நிதி திரட்டி உதவியும் வருகிறார். இந்நிறுவனம் "விதை" என்று ஒரு திட்டத்தை கல்லூரி மாணவர்களுக்கும், "வழிகாட்டிகள்" என்ற திட்டத்தை கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கும் உதவி வருகிறது. இதனால் பயன் பெற்று பலர் தங்கள் வாழ்க்கையில் முன்னேறி இருக்கிறார்கள்.இந்நிலையில் சூர்யா பத்து வருடங்களுக்கு முன் "அகரம் ஃபவுண்டேஷன்" மூலம் செய்த உதவியால் கூலித் தொழிலாளியின் மகன் டாக்டர் ஆனதை அறிந்தவர்கள் சூர்யாவை பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

பத்து வருடங்களுக்கும் முன்பு 2010ம் ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம், அகரம் ஃபவுண்டேஷன் இணைந்து பொருளாதாரத்தில் பின்தங்கி படிக்க கஷ்டப்படும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் பொருளாதார உதவி பெறும் வகையில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அதில் தங்கள் தேவைகளை கேட்கும் மாணவர்களுக்கு அவர்களின் தேவை உணர்ந்து அகரம் உதவியது.
 
இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த நந்தகுமார் என்ற மாணவன் கலந்து கொண்டு சூர்யாவின் அகரம் ஃபவுண்டேஷன் உதவியை நாடினார். அந்நிகழ்ச்சியில் அவர் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டேன் ஆனால் மேல் படிப்பு தொடர போதிய வசதி இல்லை என கூறினார்.அந்நிகழ்ச்சியில் சூர்யா உங்கள் மதிப்பெண் பற்றி கேட்ட போது நந்தகுமார் நான் பன்னிரெண்டாம் வகுப்பில் 1160 மதிப்பெண் எடுத்தேன், எனக்கு மருத்துவம் படிக்க ஆசை என்றும் மெடிகல் கட் ஆஃப் 199 என்றும் கூறினார். உங்கள் குடும்ப சூழ்நிலை பற்றி சூர்யா கேக்க அதற்கு நந்தகுமார் என் அம்மா, அப்பா இருவரும் கூலித் தொழிலாளிகள், வீட்டில் உணவு கிடைக்காத நிலையில், சத்துணவு கூடத்தில் கிடைத்த உணவையே உண்டு, படிக்ககூட விளக்கு இல்லாமல் தெரு விளக்கின் ஒளியில் தான் தீவிரமாக படித்தேன், படிப்பு ஒன்று தான் என் நம்பிக்கை என்று கூறி கண் கலங்கினார்.

அதன் பின்னர் நந்தகுமாரின் அம்மாவிடம் மகன் பற்றி கேக்க என் மகன் நல்ல திறமைசாலி , நல்ல படிப்பாளி அவனுக்கு டாக்டர் ஆகத் தான் ஆசை ஆனால் அவனை படிக்க வைக்க எங்களிடம் வசதி இல்லை என்று கூறினார். இதைக் கேட்டு மனம்வருந்திய சூர்யா கண்டிப்பாக நந்தகுமாருக்கு உதவி செய்வதாக வாக்குறுதி அளித்தார்.நிகழ்ச்சியில் கூறியபடியே சூர்யா அந்த மாணவனுக்கு அகரம் ஃபவுண்டேஷன் மூலம் நிதியுதவி செய்து சென்னையிலுள்ள  MMC மருத்துவக் கல்லூரியில் மெடிக்கல் சீட் பெற்று, மேலும் அனைத்திற்கும் தேவையான நிதியுதவிகளை செய்தார். 

தன் தீவிர படிப்பால், அயராத உழைப்பால்  மருத்துவப் படிப்பையும், மேல் படிப்பையும் முடித்து, மெடிக்கல் டிரெய்னிங்கையும் முறையே முடித்து 10 வருடங்கள் கழித்து மருத்துவராகி தன்னால் முடியும் என்று நிரூபித்து காட்டியிருக்கிறார் Dr. நந்தகுமார். இப்போது அரியலூரில் டாக்டராக பணி புரிந்து வரும் நந்தகுமார் பத்து வருடங்களுக்கு முன் சூர்யாவும் அகரமும் செய்த உதைக்காக நன்றி கூறி மனமகிழ்ச்சி  அடைந்துள்ளார்.

Post a Comment

புதியது பழையவை