கடந்த 2017 ஆண்டு மெரினா கடற்கரையில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல குரல்கள் ஒலித்தது. கடல் அலையின் ஓசையை விட காளைக்களுக்கு ஆதரவான ஓசையே மேலோங்கி இருந்தது. அந்த போராட்டத்தில் கலந்துகொண்ட ஆதரவுக் கரங்களில் ஒன்று தான் ஜூலி. அன்றைய நாட்களில் மீடியாக்களிலும், சமூக வலைதளங்களிலும் மக்களுக்கு பெரிதும் பரிச்சயமான முகம் ஜூலியினுடையது. அதன் மூலமே ஜூலிக்கு பெரிய ரசிகர் படை, நர்பெயர்கள், பாராட்டுகள் என குவிந்தன. இதன் மூலமே அந்த ஆண்டு ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் (தமிழ்) நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பும் கிடைத்தது. ஜூலிக்காக பிக் பாஸ் நிகழ்ச்சி பார்க்க ஆரம்பித்த பலர் ஜூலி எப்படியும் இந்த நிகழ்ச்சியின் மூலம் நற்பெயர் எடுத்து வாழ்வில் முன்னேறி விடுவார் என்றும் எதிர்பார்த்தனர். ஆனால் நடந்தது என்னவோ வேறு. பிக் பாஸில் சக போட்டியாளரான நடிகை ஒவியாவுடனான பிரச்சினைகளில் ஜூலியின் பெயர் இகழப்பட்டது. நிகழ்ச்சியில் பொய் மட்டுமே கூறி வந்த நிலையில் ஜூலியை ஹவுஸ்மேட்ஸ் உட்பட அனைவரும் வெறுத்தனர். இதனால் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது எந்த அளவுக்கு நல்ல பெயர் எடுத்தாரோ அதை விட பெரிய அளவில் பெயர் கேட்டுபோனது. போலி ஜூலியென கிசுகிசுக்கப் பட்டார்.

 
பலர் ஜூலியை வெறுத்து ஒதுக்கினாலும் சிலர் அப்போதும் அவருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுக்க எண்ணினர். அதுவே அவருக்கு நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கும் வாய்ப்பைக் கொடுத்தது. அடிக்கடி டிவிட்டர் பக்கங்களில் பதிவுகள் இடுவதை வழக்கமாகவும் கொண்டிருந்தார் ஜூலி. ஆனால் அந்த பதிவுகளின் கீழும் சிலர் போலி ஜூலி... போலி ஜூலி என கமெண்ட் செய்து வந்தனர். இதனால் மனமுடைந்த ஜூலி டிவிட்டரில் பதிவிடுவதை குறைத்துக்கொண்டு தன் கவனத்தை இன்ஸ்டாகிராமின் பக்கம் திருப்பி அதில் பதிவுகளிட ஆரம்பித்தார். இன்ஸ்டாகிராமில் எந்த வகையான bad commentsம் வராததால் கொஞ்சம் மன நிம்மதி அடைந்தார்.


மூன்று வருடங்கள் கழித்து இந்த கொரோனா லாக்டவுன் நாட்களில் வீட்டில் இருந்து வந்த ஜூலிக்கு சில Photoshoot வாய்ப்புகள் வர அதில் மணக்கோலத்தில் சில புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார், மேலும் பிக் பாஸ் முடிந்து வருடங்கள்  ஆனதால் இப்போது எந்த பிரச்சினையும் வராது என்று எண்ணி ஜூலி மீண்டும் தன் டிவிட்டர் பக்கத்திலும் போட்டோக்களை வெளியிட நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கிவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஜூலி மூன்று வருடங்கள் ஆன பின்னரும் ஒருவரின் பாஸ்ட் பற்றி பேசுவது தவறு என்று குறிப்பிட்டு இருந்தார். அதையும் சிலர் கிண்டலடிக்க சைபர் புல்லிங்கிற்கு ஆளாகியுள்ளார் ஜூலி.

இதனால் சற்றும் மனம் தளராத ஜூலி "உன் கனவை கொல்லமுடியாததால் உன் தன்மையை கொல்லமுயல்வார்கள்" என்று டுவீட் செய்து Stop Cyberbullying என்று ஹாஷ்டேக் இட்டுள்ளார்.

மேலும் இதை சிலர் கிந்தல்டித்தும், பாராட்டியும் வருகின்றனர். ஜூலி பிரபல தொழிலதிபருடன் திருமண ஏற்பாடு நடப்பதாக வெளியான செய்தி உண்மையா என்று கேட்ட ரசிகருக்கு இல்லை என்று பதிலளித்துள்ளார் ஜூலி.

Post a Comment

புதியது பழையவை