இந்திய அணியின் முதன்முதலாக 1983 ஆம் ஆண்டுகளில் உலக கோப்பை வென்ற.து அதன் பின்னர் 2003 ஆம் ஆண்டு சௌரவ் கங்குலி தலைமையில் இறுதிப்போட்டிக்கு சென்றது. சௌரவ் கங்குலி கோப்பைகளை வெல்லவில்லை என்றாலும் இந்தியாவிற்கு எப்படி ஆக்ரோஷமாக ஆடுவது என்று கற்றுக்கொடுத்தவர்.


 அதன் பின்னர் தோனி தலைமை ஏற்றார். 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை, 2011 ஆம் ஆண்டில் 50 ஓவர் உலகக் கோப்பை, 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடர் என அனைத்தையும் வென்று குவித்தார் .


விராட் கோலி தற்போது அனைத்து ஐசிசி தொடர்களிலும் நன்றாக விளையாடுகிறார். ஆனால் இந்திய அணி கோப்பையை வெல்லவில்லை. இந்நிலையில் இது குறித்து ஸ்ரீகாந்த் பேசியுள்ளார் .அவர் கூறுகையில்..


 கங்குலி நல்ல கேப்டன் தான். ஆனால் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் தோனி மிகவும் திறமை வாய்ந்தவராக அணியை வழி நடத்தியுள்ளார். அவர் தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இதனால் தோனி தான் மிகச் சிறந்த கேப்டன் என்று கூறியுள்ளார் ஸ்ரீகாந்த்.


Post a Comment

புதியது பழையவை