தமிழ் சினிமாவிற்கு கேரளாவிலிருந்து வந்த மற்றுமொரு நடிகை மஞ்சிமா மோகன். அந்த வகையில் தனது முதல் படத்திலேயே ரசிகர்களை சுண்டி கொடுத்தவர். இவர் பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்ட இவர் 1998 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

 

அதன் பின்னர் சுந்தர புருஷன், தாண்டவம் ஆகிய படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் .2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் ஒரு வடக்கன் செல்பி என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

 

தமிழிலும் அச்சம் என்பது மடமையடா படத்தில் நாயகியாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். சத்ரியன், இப்படை வெல்லும் ,தேவராட்டம் என பல மொழி படங்களில் தற்போது நடித்து உள்ளார்.தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிப் படங்களிலும் தற்போது பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் இன்ஸ்டகிராம் பக்கத்தில் எப்போதும் பிசியாக இருக்கும் அவர் ரசிகர்களிடம் அவ்வப்போது உரையாடுவார். அப்போது ரசிகர் ஒருவர் இவரிடம் உங்களுடைய மிகச்சிறந்த செக்ஸி புகைப்படத்தை அனுப்புங்கள் என்று கேட்டிருந்தார். இதற்கு தனது குழந்தை வயதில் இருந்த புகைப்படத்தை பதிவு செய்து அந்த ரசிகர் அதிர வைத்துள்ளார் மஞ்சிமா மோகன்.Post a Comment

புதியது பழையவை