தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தளபதி விஜய். கிட்டத்தட்ட சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு உயர்ந்து விட்டார் என்றே கூறலாம். அவரது படங்கள் 300 கோடி ரூபாய் வசூலிக்க, அவரது சம்பளம் 80 கோடி ரூபாயை தாண்டி செல்கிறது. இவை அனைத்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இப்படி ஒரு உச்ச நட்சத்திர வைத்து யாருக்குத்தான் படம் இயக்கும் ஆசை இருக்காது.



 அப்படி தான் தற்போது நடிகரும் இயக்குனருமான பார்த்திபனுக்கு அந்த ஆசை வந்துள்ளது. ஏற்கனவே கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் சில படங்களை இயக்கி வெற்றி பெற்றவர் பார்த்திபன் இந்நிலையில் தளபதி விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.


 சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இதனைப் பற்றி பேசியுள்ளார் தனக்கு விஜயை வைத்து ஒரு கமர்ஷியல் படத்தை இயக்கி வெற்றி பெற வேண்டும் என்பதே ஆசை என்று கூறியுள்ளார் பார்த்திபன்.


சமீபத்தில் தானே எழுதி இயக்கி தனி ஒருவனாக நடித்து ஒத்த செருப்பு என்ற படத்தை வெற்றி பெற வைத்த பார்த்திபன் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

புதியது பழையவை