கடந்த டிசம்பர் மாதம் துவங்கிய கரோனா வைரஸ் தொற்று தற்போது வரை உலகம் முழுவதும் ஒரு கோடி பேரை பாதித்துள்ளது. தொடர்ந்து அமெரிக்காவில் இது அதிகபட்சமாக இருக்கிறது. மொத்தம் 29 லட்சம் பேர் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.


 இன்னும் சில தினங்களில் இது 30 லட்சமாக மாறிவிடும். அதனைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் பிரேசில் இருக்கிறது. பிரேசிலில் 16 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்புகளில் இந்தியா நான்காவது இடத்தில் இருந்து வந்தது இந்நிலையில் கிட்டத்தட்ட ஏழு லட்சம் பேர் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது இந்தியா. 
இந்தியாவில் சமூக பரவல் இல்லாத காலகட்டத்தில் ஊரடங்கு கடுமையாக கடைபிடிக்கப்பட்டது. தற்போது ஒரு நாள் இருக்கு 5 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்கள் ஒன்றாக கூடும் நிகழ்ச்சிகளெல்லாம் நடக்க அனுமதி கொடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் கண்டிப்பாக வெகு சீக்கிரத்தில் இந்தியா இரண்டாவது இடத்திற்கு செல்லும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

Post a Comment

புதியது பழையவை