கரோனா வைரஸ் தற்போது வரை உலகம் முழுவதும் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. இதன் காரணமாக நடக்கவிருந்த குழு விளையாட்டு போட்டிகள் தற்போது வரை துவங்கவில்லை. வர்த்தகமும் பெரிய அலவில் பாதிக்கப்பட்டிருக்கிறது.


 இந்தியாவில் நடக்கவிருந்த ஐபிஎல் தொடரில் தற்போது வரை நடக்குமா என்ற சந்தேகத்தில் தான் உள்ளது.  இந்நிலையில் சமீபத்தில் கரோனா வைரஸில் இருந்து மீண்ட முதல் நாடாக நியூசிலாந்து மாறியது.
 அந்த நாட்டில் தற்போது வரை அந்த வைரஸ் மீண்டும் வரவே இல்லை என்ற அளவில் இருக்கிறது. இந்த நிலையில் மார்ச் மாதம் நடக்க வைக்க வேண்டிய ஐபிஎல் தொடரை செப்டம்பர் மாதம் எங்கள் நாட்டில் நடத்திக் கொள்ளலாம் என்று நியூசிலாந்து அழைப்பு விடுத்துள்ளது .
ஏற்கனவே ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் இலங்கை ஆகிய கிரிக்கெட் வாரியங்கள் பிசிசிஐக்கு ஐபிஎல் தொடர் நடைபெறும் என்று அழைப்பு எடுத்தது குறிப்பிடத்தக்கது.Post a Comment

புதியது பழையவை